Home /News /pudukkottai /

படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற பேருந்து ஓட்டுனர்... போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஆலங்குடியில் அவலம்..

படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற பேருந்து ஓட்டுனர்... போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஆலங்குடியில் அவலம்..

புதுக்கோடை : ஆபத்தான நிலையில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்

புதுக்கோடை : ஆபத்தான நிலையில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்

Pudukkottai | புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் படிக்கட்டில் ஆபத்தான நிலையில் தொங்கியவாறு பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் இதற்கு காராணம் பேருந்து பற்றாக்குறைதான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து மாங்கோட்டை நம்பம்பட்டி செம்பட்டி விடுதி வழியாக கறம்பக்குடி செல்லும் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள்  படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே பயணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பல மாதங்களாக பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று ஆலங்குடியில் இருந்து நம்பம்பட்டி செம்பட்டி விடுதி வழியாக கறம்பக்குடி சென்ற அரசு பேருந்தில் அதிக அளவிலான மாணவர்கள் பயணித்தனர். இதனால் பேருந்தில் இடம் இல்லாமல் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவறே ஆபத்தான முறையில் பயணித்தனர்.

    இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் பேருந்து ஆலங்குடி அரசு மருத்துவமனை அருகே வந்த போது கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினர். மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது குறித்து நடத்துநரிடம் சமூக ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் விளைவாக கூடுதலாக படிக்கட்டில் தொங்கி கொண்டு வந்த மாணவர்களை இறக்கிவிட்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை எடுத்துச் சென்றனர்.

    இதனால் பாதி வழியில் பரிதவித்த மாணவர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து மீண்டும் அவ்வழியாக வந்த ஒரு பேருந்தில் ஏறி பயணித்தனர். போதிய பேருந்து இல்லாததால் மாணவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    Also see... அமராவதி ஆற்றில் வெள்ளம் -கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    அதனால் இனிமேலாவது ஆலங்குடி போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: ர.ரியாஸ்,புதுக்கோட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Govt Bus, Pudukkottai, School students

    அடுத்த செய்தி