ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

லீவு விடுங்க மேடம்.. கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பும் புதுக்கோட்டை மாணவர்கள்..!

லீவு விடுங்க மேடம்.. கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பும் புதுக்கோட்டை மாணவர்கள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

திங்கட்கிழமைக்காக ஞாயிற்றுகிழமை முதலே மெசேஜில் கோரிக்கை விடுக்க தொடங்கிய மாணவர்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai | Pudukkottai | Tamil Nadu

  புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு லீவ் வேண்டும் என மெசேஜ் அனுப்பி வருகின்றனர்.

  புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த 10ஆம் தேதி காலாண்டு விடுமுறை முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில், மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தார்.

  திங்கட்கிழமை விடுமுறை வேண்டும் என்பதற்காக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மாவட்ட ஆட்சியருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்ப தொடங்கியுள்ளனர். ஏராளமான மாணவர்கள் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியருக்கு லீவ் வேண்டும் மேம் என மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

  இன்னும் சில மாணவர்கள் ஒரு படி மேலே சென்று உங்களுக்கு கோயிலே கட்டுகிறேன் ஒரு நாள் லீவ் மட்டும் விடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மெசேஜ் ஸ்க்ரீன்ஷாட்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: District collectors, Message, Pudukkottai, School Leave, Students