ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

ஐஜி பெயரை சொல்லி ரூ.4.50 லட்சம் மோசடி..! கையும் களவுமாக பிடிப்பட்ட ஆசாமி..!

ஐஜி பெயரை சொல்லி ரூ.4.50 லட்சம் மோசடி..! கையும் களவுமாக பிடிப்பட்ட ஆசாமி..!

ஐஜி பெயரை சொல்லி ரூ.4.50 லட்சம் மோசடி..! கையும் களவுமாக பிடிப்பட்ட ஆசாமி..!

நடிகர் விவேக்கின் நகைச்சுவைக் காட்சியைப் போல, ஐ.ஜியை எனக்கு நல்லாத் தெரியும் என பீலா வீட்டு லட்சங்களை ஏப்பம் விட்டவரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட போது முதல்வரின் உதவியாளர் மற்றம் ஐஜி பெயரை பயன்படுத்தி ஏமாற்ற முயன்ற மோசடி நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் விவேக்கின் நகைச்சுவைக் காட்சியைப் போல, ஐ.ஜியை எனக்கு நல்லாத் தெரியும் என பீலா வீட்டு லட்சங்களை ஏப்பம் விட்ட உலகமாகா உருட்டு முத்துமாணிக்கம் தற்போது சிறையில் கம்பி எண்ணிவருகிறார்.

புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் பகுதியில் ஆத்மநாதர்சாமி திருகோயில் அருகே ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர் முத்துமாணிக்கம்.தன்னுடைய கடைக்கு ஜெராக்ஸ்மிஷின், கம்ப்யூட்டர்,பொருட்கள் வாங்க முருகேசன் என்பவரிடம் ரூ 4 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார்

கடன் பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கடனுக்கு வட்டியும் கொடுக்காமல் அசலும் கொடுக்காமல் இழுத்தடித்துவந்துள்ளார். பணம் பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் கொடுத்த பணத்தை தராததால் முருகேசன் கொடுத்த கடன்பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் பெற்ற கடனை உண்மையில் தான் செலவு செய்யவில்லை முதல்வரின் தனிச்செயலர் ஒருவருக்கு கடனாக கொடுத்துள்ளதாக அடித்துவிட்டுள்ளார் மாணிக்கம். தான் கடன் கொடுத்த முதல்வரின் தனிச்செயலர் விபத்தில் சிக்கியதால் பணம் கொடுக்க முடியாமல் உள்ளதாக சில போலி புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

Read More : நுழைவுத்தேர்வில் பெயில்... மேயர் சிபாரிசில் சீட் வாங்கி படித்தேன்... மு.க.ஸ்டாலின் பள்ளி நினைவுகள்!

சில நாட்களுக்கு பிறகு கையெப்பமிட்ட காசோலை ஒன்றையும் கொடுத்துள்ளார் முத்துமாணிக்கம்.ஆனால் அதுவும் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது.மீண்டும் கேட்டபோது கோவை மாநகர காவல் ஆணையர் தனது நண்பர் அவர் மூலமாகவும் ,முதல்வரனின் தனிச்செயலாலர் மூலமாகவும் உன்னை தீர்த்துக்கட்டிவிடுவதாக மிரட்டத்தொடங்கியுள்ளார் முத்துமாணிக்கம்.

இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன் பணமோசடி தொடர்பாக ஆவுடையார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதே போன்று மற்றொரு மோசடி புகாரும் மாணிக்கம் மீது அதே காவல் நிலையத்தில் இருந்துள்ளது.

இரண்டு வழக்குத்தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார் முத்துமாணிக்கத்தை மோசடி புகாரில் கைது செய்தனர். இந்த சம்பவம் அறிந்த மேலும் சிலர் முத்துமாணிக்கம் மீது தொடர்புகார் கொடுத்து வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Pudukkottai