Home /News /pudukkottai /

கே.புதுப்பட்டி அருகே அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கொலை...

கே.புதுப்பட்டி அருகே அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கொலை...

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

Pudukkottai | புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாங்குடி என்ற நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை, உடலை கைப்பற்றிய போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே உள்ள தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாங்குடி (46). இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.  இவர் காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாங்குடி மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாங்குடி தெக்கூர் கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் மாங்குடியுடன் பேசி வந்துள்ளனர். அவர் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு மாங்குடியை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.‌  மாங்குடி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    தோட்டத்திற்கு சென்ற மாங்குடி வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி தோட்டத்திற்கு சென்ற போது  ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் பதறி உள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற கே.புதுப்பட்டி காவல்துறையினர் உயிரிழந்த மாங்குடியின் சடலத்தை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

    Also see...கெங்கவல்லி: ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

    மாங்குடியை கொலை செய்தது யார் ? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் மாங்குடியுடன் அமர்ந்து ஒன்றாக பேசிக்கொண்டு இருந்தபோது அவரை வெட்டி கொலை செய்ததால் அவருக்குத் தெரிந்தவர்களே அவரை கொலை செய்தார்களா? அல்லது ஏற்கனவே அடிதடி வழக்குகள் மாங்குடி மீது உள்ளதால் முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? ன பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Murder case, Pudukottai

    அடுத்த செய்தி