ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்.. திடீரென நிகழ்ந்த விபரீதம்: கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்.. திடீரென நிகழ்ந்த விபரீதம்: கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

படிக்கட்டில் பயணம்

படிக்கட்டில் பயணம்

மாணவர் கூட்ட நெரிசலில் பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் மாணவர்கள் பள்ளி செல்லும் வேளையிலும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையிலும் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்து வருகின்றனர்.‌ மேலும் போதிய பேருந்துகள் இல்லாததால் கூட்ட நெரிசலில் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதாக தெரிவிக்கும் மாணவர்கள் அதிகமான பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறைக்கு கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.‌

  இந்நிலையில் நேற்று கீரனூர் பேருந்து நிலையத்திலிருந்து குளத்தூர் ஒடுக்கூர் வழியாக ‌இலுப்பூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்தனர். அப்போது பேருந்து காந்தி சிலை நோக்கி சென்ற போது படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்த மாணவர்களில் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார்.‌

  அந்த மாணவர் கூட்ட நெரிசலில் பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் மாணவர் பேருந்தின் பின் சக்கரத்திற்கு கொஞ்சம் தள்ளி விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

  Also see... பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது..

  மேலும் கீரனூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதனால் உடனடியாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து முடிவெடுக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக போக்குவரத்து துறையும் முன் வர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Pudukottai, School student