ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

மனோன்மணி அம்மன் கோயிலில் கோலாகலமாக தொடங்கியது நவராத்திரி விழா..!

மனோன்மணி அம்மன் கோயிலில் கோலாகலமாக தொடங்கியது நவராத்திரி விழா..!

மனோன்மணியம்மன்

மனோன்மணியம்மன்

Pudukkottai | புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள மனோன்மணியம்மன் கோயிலில் கோலாகலமாக தொடங்கிய நவராத்திரி விழா காண்போரை கவர்ந்து வருகிறது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள மனோன்மணி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலில் மனோன்மணி அம்மன் கோயில் அறக்கட்டளை சார்பில் 39ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழா வருகின்ற நான்காம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தினசரி பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

  நேற்று முதல் நாள் நிகழ்ச்சியாக மேல கச்சேரி நாதஸ்வரத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது. இந்த நவராத்திரி விழாவை அடுத்து கோயில் வளாகத்தில் கல்யாண செட், கிருஷ்ணர் வெண்ணையை உண்பது போல் உள்ள கிருஷ்ணர் பொம்மைகள், மணமக்கள் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது போன்ற தத்ரூவ பொம்மைகள், உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி நிற்கும் பொம்மைகள், கண்ணன் ராதை உள்ளிட்ட பல்வேறு விதமான 500க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

  இது பக்தர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த நவராத்திரி விழா முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் கடைசி மூன்று நாள் லட்சுமிக்காகவும் என ஒன்பது நாட்கள் மூன்று தெய்வங்களையும் வழிபடக்கூடிய சிறப்பு வாய்ந்தது.

  கொலு பொம்மைகள்

  Also see... 9 பகுதிகள், 9 கலாச்சாரம், 9 இரவுகள்... இந்தியாவின் நவராத்திரி திருவிழாக்கள் இவை!

  இந்த விழாவில் 9 படிகளிலும் நவராத்திரி கொலு பொம்மைகளை வைத்து வழிபடும்போது பல்வேறு நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் ஒவ்வொரு நாளும் சுண்டல், ஒன்பது வகையான மலர்கள், 9 வகை தானியங்கள் ஒன்பது வகை ரவிக்கை துணியில் வைத்து பாரம்பரியமாக நவராத்திரி நிகழ்வு நடைபெறுவது வழக்கமாகும்.

  செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Navarathri, Pudukkottai