Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

இறந்துபோன கோயில் காளையின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்த கிராம மக்கள்

இறந்துபோன கோயில் காளையின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்த கிராம மக்கள்

உயிரிழந்த காளை ஆதி உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி

உயிரிழந்த காளை ஆதி உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி

Pudukkottai Bull Death | வாணக்கன்காடு ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவில் காளை இறந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை அருகே இறந்து போன ஜல்லிக்கட்டு காளையின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா வாணக்கன்காடு ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயம் உள்ளது. இந்தக் கோவிலுக்காக சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் ஆதி என்ற கோவில் காளையை வளர்த்து வருகின்றனர். சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் பிரபலமான இந்த காளை வயது முதிர்வின் காரணமாக நேற்று உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு காளை 150 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள அனைவர் வீட்டிலும் ஒரு பிள்ளை போல் இந்த காளையை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கிராம மக்கள் நேற்று  அஞ்சலி செலுத்திய பின்னர் ஊர்வலம் காளையின் உடலை சுற்றுவட்டாரத்தை கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மேளதாளங்களுடன் திருவிழா போல் சகல மரியாதைகளுடன் எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

செய்தியாளர்: ரியாஸ் (புதுக்கோட்டை)

First published:

Tags: Local News, Pudukkottai