Home /News /pudukkottai /

புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லையென புகார்... பெற்றோர்கள்போராட்டம்

புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லையென புகார்... பெற்றோர்கள்போராட்டம்

போராட்டம் நடத்தும் பெற்றோர்கள்

போராட்டம் நடத்தும் பெற்றோர்கள்

Pudukkottai | புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை. மாணவர்களுக்கு தேவையான வகுப்பறை  வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை கண்டித்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் புதுக்கோட்டை தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் அரசு உயர் துவக்கப்பள்ளி (Upper Primary School) செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் முயற்சியில் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

    இதனால் ஏற்கனவே 540 மாணவர்கள் படித்து வந்த இந்த பள்ளியில் கடந்தாண்டில் 840 பேர் சேர்ந்தனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தகுந்தார் போல் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும் மாணவர்கள் கல்வி பயில போதிய வகுப்பறை கட்டட வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் நடைபாண்டில் மாணவர்கள் சேர்க்கை சற்று குறைந்து.

    தற்போது இந்த பள்ளியில் 796 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு தகுந்தார் போல் வகுப்பறை கட்டட வசதியை மேம்படுத்த வேண்டும். கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட கல்வித்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று பள்ளியின் முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த பள்ளியில் 796 மாணவர்கள் கல்வி பயின்று வரக்கூடிய நிலையில் 27 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது தலைமை ஆசிரியருடன் சேர்த்து 9 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதனால் மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக் கொடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கல்வித் தரம் குறைந்து வருகிறது.

    வசதியாக உள்ளவர்கள் தனியார் பள்ளியை நோக்கி செல்வார்கள். ஆனால் எங்களைப் போன்ற ஏழ்மையின் விளிம்பில் உள்ளவர்கள் அரசு பள்ளியில்தான் மாணவர்களை சேர்க்க முடியும். தமிழக அரசு பள்ளிக்கு என்று பல்வேறு சலுகைகளை அறிவித்து கல்வித்தரத்தை உயர்த்தி வரக்கூடிய நிலையில் புதுக்கோட்டையில் உள்ள இந்த அரசு உயர் துவக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் போதிய கட்டட வசதிகள் இல்லாததால் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து வருகிறது என்று பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளி


    மேலும் அரசு பள்ளியை நம்பி நாங்கள் எங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்தோம். ஆனால் தற்பொழுது தங்கள் பிள்ளைகள் அடிப்படை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியும் உடனடியாக பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க கல்வித் துறையும் மாவட்ட நிர்வாகமும் முன் வர வேண்டும் என்று அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Also see... திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது..

    இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத மாணவர்களின் பெற்றோர்கள் கல்வித்துறை சார்பில் யாரேனும் வந்து உடனடியாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று கூறி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Govt School, Pudukkottai

    அடுத்த செய்தி