ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

பொய் வழக்கால் பெண் தற்கொலை.. திமுகவினரை கைது செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்

பொய் வழக்கால் பெண் தற்கொலை.. திமுகவினரை கைது செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

Annamalai: புதுக்கோட்டையில் பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பொய் புகார் அளித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் - அண்ணாமலை

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  திமுகவினர் தூண்டுதலால் போடப்பட்ட பொய் வழக்கில் பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

  புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் மனைவி கோகிலா. கோகிலா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  சம்பவம் அறிந்து வந்த புதுக்கோட்டை போலீசார் கோகிலாவின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவித்துவிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கோகிலா எழுதியதாக கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

  கடிதத்தில், `நான் கோகிலா, என் சாவுக்கு எம்.எம்.குமார், அவர் மனைவி புவனேஸ்வரி ஆகியோர்தான் காரணம்.  திமுக கட்சியின் அராஜகம் மற்றும்  பவரை குமார் எங்களிடம் காண்பித்துவிட்டார். செய்யாத தவற்றுக்காக பொய் வழக்குப் போட்டு, கீரமங்கலம் ஸ்டேஷனில் என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டனர்.  பொய் வழக்கை என்ன என்றே விசாரிக்காமல் எஸ்.ஐ. ஜெயக்குமார், லேடி போலீஸ் கிரேஜி ஆகியோர் அதிகாலை 5 மணிக்கே  போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் என்னை மிரட்டினார்கள்.

  இதனால் என் கணவர் மன உளைச்சலுக்கு ஆளாகி 10 நாட்களாக எங்கே சென்றார் என்றுக்கூட தெரியவில்லை. அவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். சாதாரண கேஸை கடுமையாக பதிவு செய்ய வைத்து என்னை திருச்சி ஜெயிலுக்கு அனுப்புவதாக மிரட்டினார். இதனால் நான் சாவுகிறேன்’ என கூறியிருந்தார்.

  இதனதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சகோதரி கோகிலா திமுக நிர்வாகியின் தூண்டுதலின் பெயரால் பதியப்பட்ட பொய் வழக்கினால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக உயிரைத் துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

  திறனற்ற திமுக அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது. இந்த உயிரிழப்புக்குக் காரணமான அனைவரின் மீது  திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவி மையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Murugesh M
  First published:

  Tags: Annamalai, BJP, DMK cadres