ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த குடிநீர் தொட்டிக்குள் மலம் கலக்கப்பட்ட கொடூரம்.. புதுக்கோட்டை ஆட்சியர் நேரில் விசாரணை

ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த குடிநீர் தொட்டிக்குள் மலம் கலக்கப்பட்ட கொடூரம்.. புதுக்கோட்டை ஆட்சியர் நேரில் விசாரணை

தண்ணீர் தொட்டிக்குள் மலம் கழிக்கப்பட்ட கொடூரம்

தண்ணீர் தொட்டிக்குள் மலம் கழிக்கப்பட்ட கொடூரம்

Pudukkottai water tank issue | புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டையில் வேங்கிவயல் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த 4 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குடிநீரில் பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை தண்ணீர் மிகவும் மோசமாக வந்ததையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் ஏறி பார்த்துள்ளனர். அப்போது, தண்ணீர் தொட்டிக்குள் மலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், கடைகளில் பாட்டில்கள் தண்ணீர் வாங்கி குடித்து வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் நல்ல குடிநீர் வசதி செய்து தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: ரியாஸ், புதுக்கோட்டை.

First published:

Tags: Local News, Pudukkottai, Water