ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

ஒரு ரூபாய்க்கு முடி திருத்தம்.. சலூன் அறிவித்த அதிரடி ஆஃபர்... குவிந்த பொதுமக்கள்!

ஒரு ரூபாய்க்கு முடி திருத்தம்.. சலூன் அறிவித்த அதிரடி ஆஃபர்... குவிந்த பொதுமக்கள்!

ஒரு ரூபாய் சலூன்

ஒரு ரூபாய் சலூன்

ஆண்கள் பெண்கள் என இருபாலரும் கடையில் குவிந்து முடி திருத்தம் மற்றும்  சிகை அலங்காரம் செய்துகொண்டனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டையில் சலூன் கடையுடன் கூடிய அழகு நிலையம் ஒன்றில் ஒரு ரூபாய்க்கு முடி திருத்தம் மற்றும் சிகை அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான மக்கள் இந்த சேவையை பெற்று மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் இன்று புதிதாக ஸ்டுடியோ 7 என்ற சலூன் கடையுடன் கூடிய அழகு நிலையம் திறக்கப்பட்டது. இந்த கடையின் திறப்பு விழா சலுகையாக இன்று ஒரு நாள் முடித்திருத்தம் மற்றும் சிகை அலங்காரம் ஒரு ரூபாய்க்கு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து புதிய ஒரு ரூபாய் நாணயத்துடன் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கடையில் குவிந்து முடி திருத்தம் மற்றும்  சிகை அலங்காரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுச் சென்றனர்.

மேலும் இன்று அந்த சலூன் கடைக்கு வருகை தந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பையும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

- ரியாஸ், செய்தியாளர், புதுக்கோட்டை

First published:

Tags: Beauty parlour, Offer, Pudukkottai