வேங்கைவயலில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் அதற்காக ரூ.9 லட்சம் நிதி வழங்குவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 5 நாட்களுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. வேங்கை வயல் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான தனிப்படை, நேற்று வரை 55 நபர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், சிபிசிஐடி எஸ்.பி. தில்லை நடராஜன், திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர் ஆகியோர் வேங்கை வயல் மக்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே , மனிதக்கழிவு கலக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டியை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில், சிபிசிஐடி விசாரணை முடிந்து குற்றவாளியை கண்டறிந்ததும் வேங்கைவயல் குடிநீர் தொட்டி இடிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில் வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் புதிதாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அவரது எம்.பி தொகுதி நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pudukottai, Scheduled caste