ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை கே.ராயவரம் மஞ்சுவிரட்டு.. காளை முட்டியதில் பார்வையாளர் பரிதாப பலி..!

புதுக்கோட்டை கே.ராயவரம் மஞ்சுவிரட்டு.. காளை முட்டியதில் பார்வையாளர் பரிதாப பலி..!

மஞ்சுவிரட்டு (கோப்புப்படம்)

மஞ்சுவிரட்டு (கோப்புப்படம்)

புதுக்கோட்டை மஞ்சுவிரட்டில் காளை குத்தியதில் பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூர் உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் அரசு அனுமதியுடன் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்று வந்தது. நூற்றுக் கணக்கான பார்வையாளர்கள் மஞ்சுவிரட்டை ரசித்து வந்தனர்.

சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (50) என்பவரும் மஞ்சு விரட்டு பார்க்க வந்துள்ளார். மஞ்சுவிரட்டு பார்த்துக்கொண்டிருந்தபோது கணேசனை காளை முட்டியதில் காயமடைந்து உயிரிழந்தார்.

நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் காளை குத்தியதில் உயிரிழந்தார். அதேபோல் திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த அரவிந்த் என்ற இளைஞரும் காளை முட்டித் தள்ளியதில் பலியானார். இந்த நிலையில் மஞ்சுவிரட்டு பார்க்க வந்த கணேசனும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Death, Pudukottai- Important news