முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / "என்னால தான் முடியல நீங்க நல்லா வரனும்டா" தன் மாணவிகள் மூலம் கனவை நனவாக்கிய புதுக்கோட்டை கபடி வீரர்!

"என்னால தான் முடியல நீங்க நல்லா வரனும்டா" தன் மாணவிகள் மூலம் கனவை நனவாக்கிய புதுக்கோட்டை கபடி வீரர்!

கபடி கோச் புவனேஸ்வரி

கபடி கோச் புவனேஸ்வரி

pudukkottai | புதுக்கோட்டையில் தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்கம் வென்ற புவனேஸ்வரி தற்போது அரசு பள்ளி மாணவிகளுக்கு கோச் ஆக மாறினார்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் ராஜகிரி ஊராட்சியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். புவனேஸ்வரியின் பெற்றோர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். புவனேஸ்வரிக்கு சிறு வயது முதலே கபடி போட்டியில் மிகுந்த ஆர்வம். சரியான பயிற்சி இல்லை என்றாலும் ஆர்வம் காரணமாக பல தடைகளை தாண்டி தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

புவனேஸ்வரியை போல கபடி போட்டியில்  சாதிக்க வேண்டும் என இவரது ஊரின் உள்ள சிறுமிகளுக்கும் ஆசை வந்தது. ஆனால் இவர்களுக்கு உள்ளூரில் பயிற்சி அளிக்க பயிற்சியாளர் இல்லை என்பதால் கனவை அடைவதில் இந்த சிறுமிகளுக்கு தடை ஏற்பட்டது.

இதனால் இந்த சிறுமிகளுக்கு பயிற்சியாளராக மாறினார் புவனேஸ்வரி. இலவசமாக பயிற்சி அளித்து வருவதுடன் அவர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயார் செய்கிறார்.

புவனேஸ்வரியிடம் பயிற்சி  பெற்று வரும் சிறுமிகள் கூறுகையில், “எங்களின் கபடி கனவை நனவாக்க போராடுவது அக்கா தான். அவங்களுக்கு எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எங்களுக்காக நிறைய கஷ்டப்பட்டு இருக்காங்க எங்களை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்காங்க” என்று கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க  | ”பருவ மழை சரியாக பெய்யவில்லை”  வேதனையில் புதுக்கோட்டை விவசாயிகள்!

கபடி வீராங்கனை பயிற்சியாளர் ஆன பயணம் குறித்து புவனேஸ்வரி கூறுகையில், “எனக்கு சிறு வயதில் இருதே கபடி விளையாட்டின் மீது மிகவும் ஆர்வம் உள்ளது. நான் ஐந்து வருடங்களாக பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று பல போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளேன். அது மட்டுமல்ல இரண்டு முறை தேசிய அளவில் நடந்த போட்டிகளில் தமிழ் நாடுக்காக தங்கம் பதக்கம் பெற்று   இருக்கிறேன்.

சரியான பயிற்சியாளர் இல்லாததால் என்னால் சர்வதேச கபடி கோட்டிகளிகளில் கலந்துக்கொள்ள  இயலவில்லை. அதற்குபின்புதான் எனது ஊரின் அருகாமையில் இருக்கும் பள்ளி மாணவிகள் அனைவர்களுக்கும் திறமைகள் இருந்தும் அதனை வழிநடத்தயாரும்  முன் வரவில்லை என்பதையும் தெரிந்திக்கொண்டேன் ஆகையால் எனது உடற்கல்வி ஆசிரியர் வழிகாட்டுதலின்படி நான் அனைவர்க்கும்  என்னோட சொந்த முயற்சியில் மட்டுமே எந்த விதமான கட்டணமும் இல்லாமல் பயிற்சிகள் அளித்துகொண்டு வருகின்றேன்.

நான் எடுக்கும் முயற்சிக்கு ஒரே ஒரு காரணம் திறமை இருந்தும் என்னால் சாதிக்க முடியவில்லை அந்த நிலை எந்த மாணவிக்கும் வரக்கூடாது என்பது தான்.  எனவே யாராக இருந்தாலும் அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர உறுதுணையாய் நிற்பேன். எனது பயிற்சி மையத்தில் தற்போது 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பயிற்சி எடுக்கும் மாணவிகள் அணைவரும் அரசு பள்ளி மாணவிகள் தான். அதனால் எந்த கட்டணமும் வசூலிக்கவும் மாட்டேன்.

இதையும் படிங்க | புதுக்கோட்டை மாவட்டத்தையே தன் 4 லட்சம் மரக்கன்றுகள் மூலம்  பசுமையாக மாற்றி வரும் ”மரம் ராஜா”

என் மூலம் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் சென்ற மாதம் 13 - 1 5 வரை கோவாவில் தேசிய அளவில் நடந்த கபாடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனார்கள். வருகின்ற 24 ம் தேதி  நேபாலில் சர்வதேச கபடி போட்டியில் கலந்துக்கொள்ள தேர்வாகியுள்ளனர். திறமைகள் இருக்கும் இடத்தில் வசதிகள் இல்லை ஆகையால்  நமது தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு  உதவ முன் வரவேண்டும் என்று கோரிக்கையுடன் மாணவிகளுக்கு பயிற்சியளிக்க தொடங்கினார் புவனேஸ்வரி.

தன் கனவை தன் மாணவிகள் மூலம் நனவாக்க முயற்சிக்கு புவனேஸ்வரியின் செயல்களுக்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது. சத்தமில்லாமல் சாதனைகள் பல செய்யும் நல்ல உள்ளங்கள் வரிசையில் இருக்கும் புவனேஸ்வரியின் நல்ல நோக்கத்திற்கு ஹாட்ஸ் ஆப்..

செய்தியாளர்: சினேகா விஜயன், புதுக்கோட்டை.

First published:

Tags: Local News, Pudukkottai