முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / "என்ன இதெல்லாம்" செருப்பு இல்லாமல் நின்ற மாணவர்களை பார்த்து கடுப்பான ஆட்சியர்!

"என்ன இதெல்லாம்" செருப்பு இல்லாமல் நின்ற மாணவர்களை பார்த்து கடுப்பான ஆட்சியர்!

ஆட்சியர் கவிதா ராமு

ஆட்சியர் கவிதா ராமு

Pudukkottai News அரசு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரை வரவேற்க காலணி அணியாமல் நின்ற மாணவர்களை பார்த்த ஆட்சியர் கவிதா ராமு ஆசிரியரை கடிந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் லெம்பலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பங்கேற்றார். அப்போது பள்ளிக்கு வந்த ஆட்சியரை வரவேற்பதற்காக மாணவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் காலணிகள் அணியாமல் வரிசையாக நின்றிருந்தனர். மாணவர்களின் கைத்தட்டு வரவேற்பை ஏற்ற ஆட்சியர் கவிதா ராமு, மாணவர்கள் காலணி அணியாமல் இருப்பதை அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து அங்கிருந்த ஆசிரியர்களை அழைத்து ஏன் மாணவர்கள் காலணி அணியாமல் நிற்கின்றனர் என கேள்வி எழுப்பினார். இதனை கேட்டு பதிலளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திருதிருவென முழித்தனர். மரியாதை நிமித்தமாக காலணியை கழட்ட சொல்லியிருப்பார்கள் என்பதை உணர்ந்த ஆட்சியர் கடுப்பாகி உடனடியாக மாணவர்களை காலணி அணிய சொல்லி உத்தரவிட்டார்.தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் காலணியை அணிந்து கொண்டனர். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களின் நெஞ்சை வருடியது.

செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை.

First published:

Tags: Local News, Pudukkottai, School students