ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

சுக்குநூறாக நொறுங்கிய டெம்போ.. பலியான காளைகள்.. புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு முடிந்து திரும்பிய போது சோகம்!

சுக்குநூறாக நொறுங்கிய டெம்போ.. பலியான காளைகள்.. புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு முடிந்து திரும்பிய போது சோகம்!

விபத்துக்குள்ளான வாகனம்

விபத்துக்குள்ளான வாகனம்

Pudukottai Jallikattu | புதுக்கோட்டை வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று திரும்பியவர்களும், காளைகளும் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai | Viralimalai

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று டெம்போவில் திரும்பிய காளைகள், காளைகளின் உரிமையாளர் மூன்று பேர் அரசுப்பேருந்து மோதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை  மாவட்டம் வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுவிட்டு 3 காளைகள் உடன் மாட்டு உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் அடங்கிய 6 பேர் டெம்போ வேனில் விராலிமலை சென்றுள்ளனர். அப்போது திருவரங்குளம்  அருகே உள்ள புஷ்கரம் காலேஜ் அருகே சென்ற போது டெம்போ வாகனமும் பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப்பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

அரசு பேருந்து மோதிய விபத்தில் மூன்று காளைகளும் வாகனத்தில் வந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 2பேர் பலியான நிலையில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வந்த கொடும்பாளூர் விக்கி (22), மணப்பாறையை சேர்ந்த  மணிகண்டன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் அதே வாகனத்தில் வந்த  4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று திரும்பியவர்களும், காளைகளும் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

First published:

Tags: Accident, Death, Jallikattu, Local News, Pudukkottai