புதுக்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜசேகரன் தலைமையிலான அதிமுகவினர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ் தான் என்றும் அதனால் ஓபிஎஸ் ஒற்றைத் தலைமையை ஏற்கவேண்டும் என்று கூறி ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு பேருந்துகளில் சென்னை நோக்கி புறப்பட்டனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் என இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (23ஆம் தேதி) அதிமுக பொதுக்குழு மற்றும் செயல்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
அதன்படி, இபிஎஸ் ஒற்றை தலைமை ஏற்கவேண்டும் என்று ஒரு பிரிவினரும், ஓபிஎஸ்தான் ஒற்றை தலைமை ஏற்கவேண்டும்என்று மறுபுறமும் ஆதரவாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அவரவர் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது, விளம்பர பதாகைகள் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டும், தங்களது ஆதரவை நேரில் சென்று தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு தெற்கு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
ஆனால், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜசேகரன் தலைமையிலான அதிமுகவினர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை அண்ணா சிலையில் இருந்து இரண்டு பேருந்துகளில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
Must Read : ஜெயலலிதா நினைவிடத்துக்கு தொண்டர்களுடன் செல்லத் தயாராகும் ஓ.பன்னீர் செல்வம்- உச்சகட்ட பரபரப்பில் அ.தி.மு.க
அதற்கு முன்னதாக ஓபிஎஸ் படங்கள் உள்ள பதாகைகளை கையில் ஏந்தி ‘ஓபிஎஸ் வாழ்க’ என்றும் ‘ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்’ என்றும் ‘ஒற்றை தலைமையை ஏற்க ஓபிஎஸ் வரவேண்டும்’ என்ற முழக்கங்களை எழுப்பிபடி சென்றனர்.
செய்தியாளர் - ர.ரியாஸ், புதுக்கோட்டை
உங்கள் நகரத்திலிருந்து(Pudukkottai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.