ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

20-க்கும் மேற்பட்ட பக்தர்களை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய் : பழனி பாதயாத்திரைக்கு சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

20-க்கும் மேற்பட்ட பக்தர்களை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய் : பழனி பாதயாத்திரைக்கு சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

தெருவில் சுற்றி திரியும் நாய்கள்

தெருவில் சுற்றி திரியும் நாய்கள்

Viralimalai Dog Bite | குடியிருப்பு தெரு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

விராலிமலையில் 20-க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் பெரியவர்களை வெறிநாய் கடித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-திருச்சி, மணப்பாறை சாலை மற்றும் அம்மன் கோயில் தெரு, முத்து நகர், சிதம்பரம் கார்டன், தெற்கு தெரு, சோதனை சாவடி உள்ளிட்ட குடியிருப்பு தெரு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இப்படி சுற்றி திரியும் நாய்கள் அவ்வழியில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில்  காலை அப்பகுதியில் சென்று வந்த சிறுவர்கள், பெண்கள், பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் என 20-க்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் நாய் கடிக்கு உட்பட்டவர்கள் விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்கின்றனர்.

செய்தியாளர் : ர.ரியாஸ்

First published:

Tags: Local News, Pudukkottai