ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் கண் மூடித்தனமாக தாக்கி கொண்ட மாணவர்கள்.. சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பு

புதுக்கோட்டையில் கண் மூடித்தனமாக தாக்கி கொண்ட மாணவர்கள்.. சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பு

பேருந்து நிலையத்தில் மோதிக்கொள்ளும் மாணவர்கள்

பேருந்து நிலையத்தில் மோதிக்கொள்ளும் மாணவர்கள்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்  தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்  கடந்த சில நாட்களாகவே  கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் போக்கு நடந்து வருவதாகவும் இதனை காவல்துறையினர் கண்காணிக்க தவறி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

  இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிற்கும் வளாகத்தில் நேற்று மாலை கல்லூரி  மாணவர்கள்  இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இதில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோர் இரு தரப்பாக பிரிந்து கட்டைகளால் மோதிக் கொள்ளும் காட்சிகளும் கும்பலாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு ஓடும் காட்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதையும் படிங்க: ஜெயலலிதா சிறை சென்றதற்கு டிடிவி தினகரனே காரணம் - சி.வி. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு

  இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசாரிடம் கேட்டபோது மது போதையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர்களிடையே இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளதாகவும் இதுகுறித்து பரம்பூரைச் சேர்ந்த வினோத் என்ற ஒரு நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தொடர்ந்து இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களிடம் விசாரணை மேற்கொள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர் : ரியாஸ்

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Local News, Puthukkottai, Viral Video