ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - கலெக்டர் சொன்ன தகவல் என்ன தெரியுமா?

புதுக்கோட்டையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - கலெக்டர் சொன்ன தகவல் என்ன தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

Pudukkottai District News | இளம் வாக்காளர்கள் 6938 பேர் உள்ளனர். மேலும் இதில் மொத்தமாக 5422 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 28,472 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டையில் வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார்.

  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் 2023 மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார்‌. அதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 661124, பெண் வாக்காளர்கள் 678887, மூன்றாம் பாலினத்தவர் 65 என மொத்தம் 13 லட்சத்து 40 ஆயிரத்து 76 வாக்காளர்கள் உள்ளனர்.

  இளம் வாக்காளர்கள் 6938 பேர் உள்ளனர். மேலும் இதில் மொத்தமாக 5422 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 28,472 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

  இதையும் படிங்க : ஜல்லிக்கட்டு `தில்’ இருந்தா மல்லுக்கட்டு - களம் இறங்க தயாராகும் புதுக்கோட்டை காளைகள்

  இந்நிலையில், இதில் கலந்துகொண்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  அதற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இளம் வாக்காளர்களை சேர்க்க அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இந்த மாதத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

  செய்தியாளர் : ரியாஸ் - புதுக்கோட்டை 

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Pudukkottai