ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

கோயிலில் திருடிவிட்டு ஆட்டோவில் தப்பிய கும்பல்.. திரைப்பட பாணியில் துரத்திப்பிடித்த ஊர் மக்கள்!

கோயிலில் திருடிவிட்டு ஆட்டோவில் தப்பிய கும்பல்.. திரைப்பட பாணியில் துரத்திப்பிடித்த ஊர் மக்கள்!

ஆட்டோவில் சென்ற திருடர்களை துரத்தி பிடித்த கிராம மக்கள்

ஆட்டோவில் சென்ற திருடர்களை துரத்தி பிடித்த கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் பகுதியில், கோயில்களில் இருந்த வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு தப்பியோடியவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்த வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு ஆட்டோவில் தப்ப முயன்றதாக கூறி கணவன் மனைவி, இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் திரைப்படப் பாணியில் துரத்தி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

  புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளான கீழையூர், ஆழ்வாய்பட்டி, அரையான்பட்டி உள்ளிட்ட பகுதி கிராமங்களில் உள்ள கோயில்களில் வெளியே மாட்டப்பட்டிருந்த வெள்ளி குத்துவிளக்கு மணி உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு ஒரு கும்பல் ஆட்டோவில் தப்பியதாக கூறப்படுகிறது.

  இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆட்டோவில் தப்பிச்செல்லும் கும்பலை இருசக்கர வாகனங்களில் சென்று விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில்  சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவில் வந்த கும்பல் பொதுமக்கள் விரட்டி வருகிறார்கள் என்று அறிந்தவுடன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இருப்பினும் விடாமல் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த ஊர் மக்களும் இளைஞர்களும் புதுக்கோட்டை நகர் பகுதிக்குள் இருக்கும் மச்சுவாடி எனும் இடத்தில் அந்த ஆட்டோவை வழிமறித்து பிடித்தனர்.

  இதில் பொதுமக்கள் சிலர் அந்தக் கொள்ளை கும்பலை சேர்ந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த ஆட்டோவில் இருந்த 10 வயது சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். ஆனால் இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், அந்த சிறுமியின் தந்தை தாக்கியதில் தான் அந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். .

  இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற கணேஷ் நகர் போலீசார் அந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு ஆட்டோவில் தப்பி வந்தவர்களை கைது செய்தனர்

  Also see... ஒரே எஸ்எம்எஸ்.. ரேஷன் கடை இருப்பு விவரம் இனி உங்கள் செல்போனில்.. சூப்பர் வசதி அறிமுகம்!

  இந்நிலையில் கோயில்களில் திருடிய கும்பல் ஆட்டோவில் தப்பி வரும் காட்சிகளும் அவர்களை அந்த கிராமத்து இளைஞர்களும் பொதுமக்களும் இரு சக்கர வாகனங்களில் விரட்டி வரும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Hindu Temple, Pudukottai, Theft