ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

Pudukkottai district | புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோணகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், நாளை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் 2வது மற்றும் 4ஆவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள், பிளஸ்-2, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொள்ளலாம்.

இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணமின்றி தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

Must Read : கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Employment camp, Job Fair, Local News, Pudukkottai