ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை உள்ளிட்ட துணை மின்நிலையத்தில் நாளை (23-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை பகுதிகள்:

கந்தர்வகோட்டை, ஆதவன்கோட்டை, புதுப்பட்டி மற்றும் பழையகந்தர்வகோட்டை ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட, ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டகுளம், மணவிடுதி, சோத்துப்பானை, சொக்கநாதபட்டி, மாந்தாங்குடி, காட்டுநாவல் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

இதேபோல மட்டையான்பட்டி, மாங்களத்துப்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, மோகனூர், பகட்டுவான்பட்டி, மல்லவராயன்பட்டி, பழையகந்தவர்வகோட்டை, வெள்ளாளவிடுதி மற்றும் சுந்தம்பட்டி ஆகிய இடங்களிலும் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai