ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் பவர் கட் - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் பவர் கட் - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

மின் தடை

மின் தடை

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (21-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை பகுதிகள்:

சிப்காட் நகர், தாவூது மில், ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான்பட்டி, கிளியூர், மேலூர், அம்மன்பேட்டை, வாகைப்பட்டி, உடையாண்டிபட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர் மற்றும் ஜீவா நகர் சிட்கோ ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல், அன்னவாசல் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான அன்னவாசல் பேருராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி மற்றும் பிராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், அண்ணா பண்ணை துணை நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் வயலோகம், மாங்குடி, மண்வேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது.

Must Read : ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?

5 மணி வரை மின்தடை

அத்துடன், மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி, நல்லூர், அரசமலை, எம்.உசிலம்பட்டி, சடையம்பட்டி, ஒலியமங்களம், காயாம்பட்டி, படுதனிப்பட்டி, மறவாமதுரை, கொன்னையம்பட்டி, இடையாத்தூர், மேலத்தானியம் மற்றும் காரையூர் உள்பட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai