Home /News /pudukkottai /

குளத்துக்கரையில் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த சாராய ஊறல் பறிமுதல்... 5 பேர் கைது

குளத்துக்கரையில் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த சாராய ஊறல் பறிமுதல்... 5 பேர் கைது

நிலத்தில் புதைத்து வைத்திருந்த சாராய ஊறல்

நிலத்தில் புதைத்து வைத்திருந்த சாராய ஊறல்

Pudukkottai | புதுக்கோட்டை அருகே சீகம்பட்டி குளத்துக்கரை மற்றும் மடையில்  கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காகத் தயாராகப் பேரலில் வைத்திருந்த 250 லிட்டர் சாராய ஊறலை சிறப்புபடை போலீசார் கண்டறிந்து மீட்டனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள குடுமியான்மலையை அடுத்த சீகம்பட்டி பகுதிகளில், சிலர் குளத்துகரை மற்றும் குளத்துமடை ஓரங்களில் சாராய ஊறல் போட்டுள்ளதாக புதுக்கோட்டை நகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட சிறப்புபடை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சீகம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அன்னவாசல் அருகே உள்ள சீகம்பட்டி குளத்து கரையில் மடைபகுதி அருகிலும் அதன் கரையிலும் 7 பிளாஸ்டிக் பேரல்களில் 250 லிட்டர் கள்ளச்சாரய ஊறல் மற்றும் 8 லிட்டர் எரி சாராயம் ஆகியவை இருப்பதை கண்டு பிடித்தனர்.

    Also see... கன்னியாகுமரி டூ காஷ்மீர்.. 10,000 கி.மீ விழிப்புணர்வு பயணம் - சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மதுரை மாற்றுத்திறனாளி இளைஞர்

    பின்னர் கள்ளச்சாரம் ஊறல் போட்ட சீகம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (26) பெருமாள் (23) சரத்குமார் (20) உப்புபாறையை சேர்ந்த கண்ணகி (38)  மகேஷ்வரி (34) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து பறிமுதல் செய்த  250 லிட்டர் கள்ளச்சாரயம் 8 லிட்டர் எரி சாராயம் ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டு புதுக்கோட்டை நகர மது விலக்கு அமலாக்கத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

    செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arrested, Crime News, Pudukkottai

    அடுத்த செய்தி