ஆயிரம் ரூபாய்க்கு ஆடைகள் வாங்குபவருக்கு ஒரு லிட்டர் பெட்ரொல் இலவசம்
பெட்ரோல் விலை உயர்வை கருத்தில் கொண்டு புதுக்கோட்டையில் திறக்கப்பட்ட புதிய ரெடிமேட் ஆடையகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு ஆடைகள் வாங்குபவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கி நூதன விளம்பரத்தில் ஈடுபட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர்.
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் இன்று புதிதாக திறக்கப்பட்ட புதிய ரெடிமேட் ஆடையகத்தில் பெட்ரோல் விலையை கருத்தில் கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு ஆடைகள் வாங்குபவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கி நூதன விளம்பரத்தில் ஈடுபட்டு மக்களை கவர்ந்தனர். மேலும் இந்த ரெடிமேட் ஆடை இயக்கத்தின் முதல் விற்பனையையும் இலவசமாக பெட்ரோல் வழங்குவதை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து ரெடிமேட் ஆடையகத்தின் உரிமையாளர்கள் கூறுகையில், “ பல ரெடிமேட் கடைகளில் பல்வேறு தள்ளுபடிகளை கொடுத்து வருகின்றனர். புதிதாக கடை திறக்கும் பொழுது என்ன செய்யலாம் என்று யோசித்த நிலையில் தற்போது பெட்ரோல் அதிக விலைக்கு விற்பதால் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் நிறுவனத்தில் ஆயிரம் ரூபாய்க்கு ஆடைகள் எடுப்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படும் என்று அறிவிக்கலாம் என திட்டமிட்டு அதை அறிவித்துள்ளோம்” என்றார்.
மேலும், “ பொதுமக்களும் இதற்கு நல்ல ஆதரவை கொடுத்து வருகின்றனர். தீபாவளி வரை 1000 ரூபாய்க்கு ஆடை வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்க உள்ளதாகவும் பெட்ரோல் வேண்டும் என்பவர்களுக்கு உடனடியாக பெட்ரோல் தேவை இல்லை பிறகு பெட்ரோல் போட்டுக் கொள்கிறோம் என்று சொல்பவர்களுக்கு ஒரு பெட்ரோல் பங்கின் டோக்கன் வழங்கி வருகின்றோம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.