முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / வேங்கைவயல் விவகாரம்: கலெக்டர், இன்ஸ்பெக்டருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

வேங்கைவயல் விவகாரம்: கலெக்டர், இன்ஸ்பெக்டருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்திய மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது.

இந்த நிலையில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் இருவரும் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Pudukottai, Scheduled caste, Tamilnadu police