ஹோம் /நியூஸ் /Pudukkottai /

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபல தொண்டைமானுக்கு நினைவு மணிமண்டபம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபல தொண்டைமானுக்கு நினைவு மணிமண்டபம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை மன்னர்

புதுக்கோட்டை மன்னர்

மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகதம் அமைத்திட ராஜா ராஜகோபல தொண்டைமான் அவர்கள் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  புதுக்கோட்டை மன்னர் ராஜகோபல தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் நினனைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கலைஞர் அவர்கள் மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை முன்னேற்றுக்கின்ற வகையில் 1974 ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். மேலும் கலைஞர் கேட்டு கொண்டதால் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகதம் அமைத்திட ராஜா ராஜகோபல தொண்டைமான் அவர்கள் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார்.

  நான் பொதுக்குழுவில் கலந்துகொள்வேன்.. ஆனால்... - ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம்

  அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாமன்னர் அவர்களின் திருவுருவச் சிலையினை கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி கலைஞர் திறந்து வைத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் இராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.

  மன்னர் ராஜகோபல தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நாளில் மன்னரின் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதுக்கோட்டை நகரில் மன்னர் ராஜகோபல தொண்டைமான் அவர்களின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: CM MK Stalin, Pudukkottai