புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் பயிலும் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த அங்கன்வாடி மைய சமையலறின் கணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.மேலும் இந்த விவகாரத்தில் அக்கறை இல்லாமல் செயல்பட்ட அங்கன்வாடி சமையலர் மற்றும் ஆசிரியை ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வெண்ணமுத்துபட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தின் சமையளராக உள்ளவர் அன்னக்கொடி. இவர் தனது கணவர் காசி(60) என்பவரை அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த அங்கன்வாடி மையத்தில் பயிலும் நான்கு வயது சிறுமிக்கு காசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதன்பின் வீட்டுக்கு சென்ற சிறுமி தனது அம்மாவிடம் உடலில் பல இடங்களில் வலிப்பதாக கூறியுள்ளார். மேலும் அங்கன்வாடியில் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், காசியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:அதிரடி கட்டண உயர்வு.. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் 26ம் தேதி அமைச்சர் ஆலோசனை
இந்த சம்பவத்திற்கு துணையாக இருந்ததாக அவரது மனைவி அன்னக்கொடி மற்றும் பணியில் கவனக் குறைவாக இருந்த அங்கன்வாடி ஆசிரியை வைரம் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minor girl, Sexual abuse, Sexual harassment