முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / 2வது திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட மனைவி.. எரித்து கொன்ற கணவன்.. ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி!

2வது திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட மனைவி.. எரித்து கொன்ற கணவன்.. ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வேளாங்கண்ணி (எ) மதி

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வேளாங்கண்ணி (எ) மதி

Pudukkottai district News : குழந்தை இல்லாததால் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த கணவனை தட்டிக் கேட்ட மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே விட்டாநிலைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி என்ற‌ மதி (45). இவரது மனைவி மதளை அம்மாள்(45). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லாததால் வேளாங்கண்ணி (எ) மதி மற்றொரு பெண்ணை அவரது மனைவிக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் இது அவரது மனைவி மதளை அம்மாளுக்கு தெரியவந்தது. இதனால், தினசரி இருவருக்குள்ளும் பிரச்சனை இருந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மதளை அம்மாளை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து வேளாங்கண்ணி கொளுத்தியுள்ளார். இதில் உயிருக்கு போராடிய மதளை அம்மாள் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் சாகும்போது அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் மதளை அம்மாளை மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்து கொலை செய்த வேளாங்கண்ணி (எ) மதி  மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி அப்துல்காதர், வேளாங்கண்ணி என்ற மதி மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Must Read : ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் ஆண்டிபட்டி பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி - மும்பை சென்று மோசடி நபரை கைது செய்த போலீஸ்

இதனை அடுத்து குற்றவாளி வேளாங்கண்ணி (எ)மாதி போலீசாரின் பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்.

செய்தியாளர் - ர.ரியாஸ்.

First published:

Tags: Judgement, Murder case, Pudukottai, Sentenced to life