ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் அரசாணை வெளியிடாதது தவறில்லை - சட்டதுறை அமைச்சர் ரகுபதி விளக்கம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் அரசாணை வெளியிடாதது தவறில்லை - சட்டதுறை அமைச்சர் ரகுபதி விளக்கம்

அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

ஆனால் 5ம் தேதியே சட்டமன்றம் கூடும் தேதி அறிவிக்கப்பட்டதால், அதன் பின்பு அரசாணை வெளியிட முடியாது. அது மட்டுமின்றி அரசாணை வெளியிட்டால் இதற்கு யாரேனும் தடை கோரி விடுவார்கள் என்பதால் அரசாணை வெளியிடவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியான சட்டம் எனவும், அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை எனவும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கவில்லை என அண்ணாமலை தற்போது கூறுவதற்கு முன்பாகவே, நானே இந்த விவகாரத்தில் அரசானை பிறப்பிக்கவில்லை என்பதை சொல்லி இருந்தேன். அதற்கான காரணத்தை பாதி மறைத்து அண்ணாமலை கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும், அவசர சட்டம் 3ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அந்த அவரச சட்டத்திலும் அன்று மாலையே ஆளுநர் கையெழுத்திட்டார். அதன் அறிவிப்பு 4ஆம் தேதி அரசு இதழில் வெளியிடப்பட்டது. ஆனால் 5ம் தேதியே சட்டமன்றம் கூடும் தேதி அறிவிக்கப்பட்டதால், அதன் பின்பு அரசாணை வெளியிட முடியாது. அது மட்டுமின்றி அரசாணை வெளியிட்டால் இதற்கு யாரேனும் தடை கோரி விடுவார்கள் என்பதாலும் சட்டமன்றத்திலேயே இதற்கான ஒப்புதலை பெற்று விடலாம் என்பதால் தான் அரசாணை வெளியிடவில்லை. வேறு எந்த காலதாமதத்தையும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு செய்யவில்லை என விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிற்கே இது ஒரு முன்மாதிரியான சட்டம். ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குமுறைபடுத்துதல் சட்டத்தை சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்டு நாங்கள் கொண்டு வந்தோம். இதற்கான அனைத்து விதமான முறையான விதிமுறைகளையும் பின்பற்றி தான் சட்டமும் இயற்றப்பட்டு அரசு இதழிலும் வெளியிடப்பட்டது என கூறினார். ஆளுநரை நாங்கள் குறை சொல்லவில்லை காலதாமதம் படுத்துகிறார் என்று தான் சொல்லி இருந்தோம், அதன்பின் ஆளுநரை நான் போய் பார்த்தேன். அவர் சந்தேகம் கேட்டார் நாங்களும் விளக்கம் அளித்தோம். இந்த விவகாரத்தில் நிச்சயம் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

செய்தியாளர் : ரியாஸ் (புதுக்கோட்டை)

First published:

Tags: CM MK Stalin, Online rummy, RN Ravi