ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

கம்போடியாவில் வேலை என மோசடி... தப்பித்து சொந்த ஊர் திரும்பிய 7 நபர்கள்..புதுக்கோட்டை ஆட்சியரிடம் புகார்!

கம்போடியாவில் வேலை என மோசடி... தப்பித்து சொந்த ஊர் திரும்பிய 7 நபர்கள்..புதுக்கோட்டை ஆட்சியரிடம் புகார்!

தப்பித்து சொந்த ஊர் திரும்பிய 7 நபர்கள்

தப்பித்து சொந்த ஊர் திரும்பிய 7 நபர்கள்

தப்பித்து வந்த இளைஞர்கள் நாங்கள் கட்டி ஏமாந்த பணத்தையும் மீட்டு எங்களை ஏமாற்றிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

கம்போடியாவில் வேலை என ஏமாந்து பணத்தை இழந்தவர்கள், தங்கள் பணத்தை முகவரிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அறந்தாங்கி அடுத்த நாகுடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், 11 இளைஞர்களிடம் 2 முதல் இரண்டரை லட்சம் பணம் வாங்கிக்கொண்டு கம்போடியாவிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து, உறவினர்களை மீண்டும் பணம் அனுப்ப சொல்லி இந்தியா திரும்பி உள்ளதாகவும் அவர்கள் கண்ணீர்மல்க புகார் அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் அறந்தாங்கியில் அலுவலகம் வைத்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கம்போடியா நாட்டில் உள்ள முட்டை நிறுவனத்திற்கு ஆட்கள் வேண்டும் மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் அதேபோல் அங்கு உள்ள கணினி வேலைக்கும் கால் சென்டருக்கும் ஆட்கள் வேண்டும் அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.

Read More : ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் ஆத்திரம்.. இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

இந்த விளம்பரத்தை நம்பி புதுக்கோட்டை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குறிப்பாக புதுக்கோட்டை சென்னை, திருவாரூர், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 11 இளைஞர்கள் தலா 2 லட்சம் முதல் 2.50 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி  கம்போடியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கு முதலில் சென்ற இரண்டு இளைஞர்கள் கால் சென்டர் மற்றும் கணினி வேலைக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு நடைபெறும் மோசடி வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில் அந்த இளைஞர்கள் இந்த வேலையை செய்ய மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்து எங்களுக்கு உரிய வேலை வழங்க வேண்டும் என்று தெரிவித்து காத்திருந்துள்ளனர். இவர்களுக்குபின் சென்ற 9 இளைஞர்களுக்கு முட்டை கம்பெனியில் வேலை தருவதாக கூறி கடந்த இரண்டு மாத காலமாக அங்கு உள்ள முகவர்கள் காலம் கடத்தி வந்த நிலையில் இருப்பதற்கு இடத்தை மட்டும் கொடுத்துவிட்டு உரிய உணவு கூட கொடுக்காமல் இருந்துள்ளனர்.

Read More : குடிகார மகனை கூலிப்படை ஏவி கொன்ற பெற்றோர்...

இதனால் இன்று வேலை கிடைத்துவிடும் நாளை வேலை கிடைத்து விடும் என்று நம்பி காத்திருந்த இளைஞர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சி இருந்துள்ளது. மேலும் இவர்கள் வேலைக்கு எடுப்பதாக கூறப்படும் முட்டை நிறுவனம் குறித்து விசாரித்த போது அப்படி ஒரு நிறுவனமே அங்கு இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த 11 இளைஞர்களில் ஏழு இளைஞர்கள் அவர்களது உறவினர்களிடம் பணம் அனுப்பக் கூறி அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என  திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

பின்னர் திருச்சி விமான நிலையத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞர்கள் தங்களை ஏமாற்றிய  பாலசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் கட்டிய பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்க இருந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தியதை தொடர்ந்து அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.

மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகையில்:

பாலசுப்பிரமணியனின் விளம்பரத்தை நம்பியும் அவர் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பியும் ஒவ்வொருவரும் இரண்டு லட்சம் முதல் 2.50 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து கம்போடியா நாட்டிற்கு முட்டை நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றோம். ஆனால் எங்களுக்கு இரண்டு மூன்று மாத காலம் ஆகியும் எந்தவித வேலையும் வழங்கப்படவில்லை . எங்களை வேலைக்கு எடுத்த நிறுவனம் என்று கூறப்படும் முட்டை நிறுவனம் ஒன்று அங்கு இல்லவே இல்லை. இது குறித்து பலமுறை எங்களை ஊருக்கு அனுப்பிய பாலசுப்பிரமணியனிடம் கேட்டும் கட்டாயம் உங்களுக்கு வேலை வந்து விடும் என்று நாட்களைக் கடத்தி எங்களை ஏமாற்றி மட்டுமே வந்தார்.

வேலை வாங்கி தருவதாக சொன்ன முட்டை கம்பெனி விளம்பரம்

ஒரு கட்டத்தில் அவர் நீங்கள் ஊர் திரும்பினால் உங்களது பணம் திரும்பி வராது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்று மிரட்டும் தருவாயில் பேசிய நிலையில் நாங்கள் ஏமாந்ததை உணர்ந்து தப்பித்தோம் பிழைத்தோம் என எங்களது உறவினர்களிடம் பணம் அனுப்ப சொல்லி இன்று ஊர் திரும்பி உள்ளோம் வட்டிக்கு பணம் வாங்கியும் நிலங்களை வித்தும் பணம் கட்டினோம் எங்களை ஏமாற்றி விட்டனர். மேலும் அந்த நாட்டிற்கு கால் சென்டர் வேலை கணினி வேலை என்று எடுக்கும் ஆட்களை அங்கு நடைபெறும் மோசடி வேலைகளுக்கு உட்படுத்துகின்றனர் மேலும் நம்ம நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் அவர்களிடம் உள்ளது அவர்களுக்கு எப்படி செல்கிறது என்றும் தெரியவில்லை எங்களைப் போல் பலரையும் அங்கு உள்ளவர்கள் ஏமாற்றி வருகின்றனர்.

சொந்த ஊர் திரும்பிய 7 பேர்இது ஒரு நெட்வொர்க் போல் உள்ளது. வெளிநாட்டிற்கு ஆட்களை அழைத்து சென்று மோசடி செய்வது மட்டுமல்லாமல் பல்வேறு மோசடிகளும் இந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது மேலும் எங்களுடன் சேர்ந்து அங்கு சென்ற நான்கு பேர் அதே நாட்டில் தான் தற்போதும் உள்ளனர். அவர்களையும் மீட்டு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாங்கள் கட்டி ஏமாந்த பணத்தையும் மீட்டு எங்களை ஏமாற்றிய முகவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து இனி எங்களைப் போன்று யாரும் ஏமாறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

செய்தியளர்: ர.ரியாஸ்

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Pudhukottai