Home /News /pudukkottai /

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சீர்வரிசை எடுத்துச் சென்ற இந்துக்கள் -மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் புதுக்கோட்டை மக்கள்

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சீர்வரிசை எடுத்துச் சென்ற இந்துக்கள் -மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் புதுக்கோட்டை மக்கள்

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சீர்வரிசை எடுத்துச்சென்ற இந்து மதத்தினர்

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சீர்வரிசை எடுத்துச்சென்ற இந்து மதத்தினர்

Pudukkottai | பள்ளிவாசலுக்கு சீர் எடுத்து வந்த இந்து மக்களுக்கு பள்ளிவாசல் சார்பில் மரியாதை செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் பூ, பழத் தாம்பூல தட்டுக்களுடன் சீர்வரிசை எடுத்துச் சென்றது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய  மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதனையடுத்து  கேசராபட்டியில் உள்ள இந்து மக்கள் அங்குள்ள பிடாரியம்மன் கோவிலிலிருந்து சீர் எடுத்து ஊர்வலமாக முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு சென்றனர்.

    சீர் வரிசையுடன் பள்ளிவாசலுக்கு வந்த இந்து மதத்தினரை இஸ்லாமியர்கள் இருகரம் கூப்பி இன்முகத்துடன் வரவேற்று சீர் வரிசையை பெற்றுக்கொண்டு பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர். இந்து முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் விதமாக இருந்தது.

    Also see...ஊட்டியில் தந்தை மகனை வெட்டி ரூ.52 லட்சம் கொள்ளை

    பள்ளிவாசலுக்கு சீர் எடுத்து வந்த இந்து மக்களுக்கு பள்ளிவாசல் சார்பில் மரியாதை செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் இந்து மதத்தினர் கலந்து கொண்டு பள்ளிவாசல் புரணமைக்கும்  பணிக்கு ரொக்கம் தொகை வழங்கினர்.

    செய்தியாளர்: ர.ரியாஸ்,புதுக்கோட்டை 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu, Muslim, Pudukkottai

    அடுத்த செய்தி