முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / அரசு பள்ளி ஆசிரியையின் அசத்தல் நடனம்.. நெகிழ்ச்சியுடன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த புதுக்கோட்டை ஆட்சியர்..

அரசு பள்ளி ஆசிரியையின் அசத்தல் நடனம்.. நெகிழ்ச்சியுடன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த புதுக்கோட்டை ஆட்சியர்..

நடனம் ஆடிய ஆசிரியை

நடனம் ஆடிய ஆசிரியை

Teacher Dance : மாணவிகளை உற்சாகப்படுத்தும் நோக்குடன் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மலையாள பாடல் ஒன்றுக்கு அற்புதமாக நடனமாடிய காட்சியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றுபவர் ரேவதி. இந்நிலையில், நடந்து முடிந்த பள்ளிகளுக்கு இடையேயான கலைத் திருவிழாவின்போது அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளும் கலைத் திருவிழாவில் பங்கேற்க நடன பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

அப்போது அப்பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்தும் நோக்குடன் மலையாள பாடல் ஒன்றுக்கு  அப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் ரேவதி நடனமாடினார். இந்நிலையில், இந்த வீடியோ காட்சியில் அவருடன் சேர்ந்து அப்பள்ளி மாணவிகளும் நடனமாடினர்.  இந்த வீடியோ தற்போர் காண்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், கலை திருவிழாவில் பங்கேற்க சென்ற அரசு பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்துவதற்காக ஆசிரியர் ரேவதி நடனமாடிய வீடியோவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எங்கள் அரசு பள்ளி ஆசிரியை ரேவதியின் ஒரு அழகான நிகழ்ச்சி. அவர் தன் குழந்தைகளுடன் நடனமாடும் ஆசையை அண்மையில் நடந்து முடிந்த கலை திருவிழா ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நடனம் வாழ்வை அழகாக்கும்” என்று ஆட்சியர் பதிவிட்டுள்ளார்.

' isDesktop="true" id="884860" youtubeid="Oth5-rX7wzo" category="pudukkottai">

புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளை உற்சாகப்படுத்தும் நோக்குடன் அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மலையாள பாடல் ஒன்றுக்கு அற்புதமாக நடனமாடிய காட்சியும், அதனை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட காட்சியும் காண்போரை கவர்ந்துள்ளது.

செய்தியாளர் : ரியாஸ் - புதுக்கோட்டை

First published:

Tags: Dance, Local News, Pudukkottai, School Teacher