முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / 8 கால்கள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி.. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற மக்கள்..!

8 கால்கள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி.. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற மக்கள்..!

புதுக்கோட்டையில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

புதுக்கோட்டையில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

Pudukottai 8 Leg  Goat Dead News | 8 கால்கள் 4 காதுகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்- சுமதி. இவர்கள் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் சுமதி வளர்த்து வந்த ஆடு ஒன்று குட்டி ஒன்றை ஈன்றது.

அந்த ஆட்டுக்குட்டி 1 தலை, 2 உடல்கள், 8 கால்கள், 4 காதுகளுடன் பிறந்ததை கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இருப்பினும் அந்த ஆட்டு குட்டி பிறந்த சற்று நேரத்திலேயே பரிதபமாக உயிரிழந்தது. அதனை தொடர்ந்து தாய் ஆடும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் ஆச்சரியத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பட்டத்திக்காடு கிராம மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கறம்பக்குடி புதுப்பட்டி மஞ்சுவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர்.

செய்தியாளர்: ர.ரியாஸ்

First published:

Tags: Local News, Pudukottai