ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு...ஏசி வேனில் அழைத்துவரப்பட்ட விஜயபாஸ்கரின் காளைகள்

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு...ஏசி வேனில் அழைத்துவரப்பட்ட விஜயபாஸ்கரின் காளைகள்

விஜயபாஸ்கரின் காளைகளை வரவேற்ற மக்கள்

விஜயபாஸ்கரின் காளைகளை வரவேற்ற மக்கள்

இந்த போட்டியில் களமிறங்கிய விஜயபாஸ்கரின் இரண்டு காளைகளையும் யாரும் அடக்க முடியாததால், காளைகளே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இன்று  வெகு விமர்சையாக தொடங்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு பாரம்பரிய முறைப்படி மேளதாளங்கள் முழங்க அப்பகுதியில் உள்ள கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டன.  ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின்னர், அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

800 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்றுள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அமைந்துள்ளதால்  உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கியும் மக்கள் உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு களித்த வண்ணம் உள்ளனர்.

இந்த போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வந்தபோது, அவருக்கும் அவரது காளைக்கும் வெடி வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜயபாஸ்கர் காளைகள் பிரத்யேக ஏசி வாகனத்தில் அழைத்துவரப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் களமிறங்கிய கொம்பன் உள்ளிட்ட விஜயபாஸ்கரின் இரண்டு காளைகளையும் யாரும் அடக்க முடியாததால், காளைகளே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு மூன்றாவது சுற்று நடைபெற்று வரக்கூடிய நிலையில் சற்றுமுன் வரை பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு ஏஆர் பெண் காவலர் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர். அதில் நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Jallikattu, Pudukkottai, Vijayabaskar