ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

கல்யாணத்தை செய்து பார், வீட்டை கட்டிப்பார், ஜல்லிக்கட்டை நடத்தி பார் - விஜயபாஸ்கர்

கல்யாணத்தை செய்து பார், வீட்டை கட்டிப்பார், ஜல்லிக்கட்டை நடத்தி பார் - விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

Jallikattu 2023 : கல்யாணத்தை செய்து பார், வீட்டை கட்டிப்பார், ஜல்லிக்கட்டை நடத்திப் பார் என்று சொல்லக்கூடிய அளவில் உள்ளது. அதனால் ஜல்லிக்கட்டு விழா குழுவினரை கசக்காமல் கஷ்டப்படுத்தாமல் வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் நடைபெற்ற 69 சமூகத்தினர் ஒன்றாக இணைந்து கொண்டாடிய பொங்கல் விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் கூறுகையில், “மெய்வழிச்சாலையில் சாதி மதங்களை கடந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டீன் என அனைத்து மதத்தினரும் 69 சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து உலகத்துக்கே ஓர் எடுத்துக்காட்டாக சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.

கல்யாணத்தை செய்து பார், வீட்டை கட்டிப்பார், ஜல்லிக்கட்டை நடத்தி பார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவது விழா குழுவின் அடுத்து மிகப்பெரிய சிரமம். அதனால் விழா குழுவை கசக்காமல் கஷ்டப்படுத்தாமல் நடைமுறைகளை எளிமைப்படுத்தி இன்னும் அதிகமான ஜல்லிக்கட்டுகள் தமிழகத்தில் விதிமுறைகளின் படி நடப்பதற்கு அரசு உதவ வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தக்கூடிய நேரத்தை குறைக்க கூடாது. 8 மணி முதல் 4 மணி வரை அனுமதி கொடுக்க வேண்டும்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரை தவிர மற்ற இடங்களில் ஆன்லைன் பதிவு முறை இருக்க கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டை பொருத்தவரை விருந்தோம்பல் என்பது முக்கியம் விருந்தளித்து பாக்கு, வெத்தலை கொடுத்து கிராம கமிட்டி மூலம் மாடுகளை அழைத்து டோக்கன் கொடுக்கக்கூடிய விருந்தோம்பல் நடைமுறை கலாச்சாரம், பாரம்பரியம் பண்பாடு பின்பற்ற வேண்டும். ஆன்லைனில் இதற்கு இடமில்லாமல் உள்ளது. அதனால் ஆன்லைன் பதிவு நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். தமிழக அரசு மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்ய தமிழக அரசு முழுமையாக தலையிட்டு அதை அமல்படுத்த வேண்டும்‌‌” என்று தெரிவித்தார்.

செய்தியாளர் : ரியாஸ் - புதுக்கோட்டை

First published:

Tags: Jallikattu, Local News, Pongal 2023, Pudukkottai