ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

இவ்வளவு வெயிட்டா? வலையை சுத்தம் செய்த மீனவர்.. கையில் சிக்கிய வெடிபொருள்!

இவ்வளவு வெயிட்டா? வலையை சுத்தம் செய்த மீனவர்.. கையில் சிக்கிய வெடிபொருள்!

 மீனவர் வலையில் சிக்கிய வெடிபொருள்

மீனவர் வலையில் சிக்கிய வெடிபொருள்

Fisherman Bomb | வெடிபொருள் சிக்கியது எப்படி தீவிரவாதிகள் ஏதேனும் இந்த பகுதியில் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணையில் கடலோர காவல் படை குழும போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே

  ஆர்.புதுப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன், வடிவேல். இவர்கள் இருவரும் கடந்த 4ம் தேதி அதிகாலையில் வடிவேலுக்கு சொந்தமான பைபர் படகில் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். பின்னர் ஆறுநாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்து விட்டு 4ம் தேதி இரவு 12 மணிக்கு கரைக்கு திரும்பியுள்ளனர்.

  அப்போது படகில் கொண்டு வந்திருந்த மீன் மற்றும் நண்டுகளை எடுத்துவிட்டு பாசிகளை சுத்தம் செய்யாமல் வலையை கடற்கரையில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் வலையில் உள்ள பாசிகளை சுத்தம் செய்ய வலையை எடுத்த போது அந்த வலையினுல் 51 mm ILLG என்ற வெடிபொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படை குழும போலீசார்

  வெடிபொருளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வெடிபொருள் வெடித்திருந்தால் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

  Also see...முடி உதிர்வால் மன உளைச்சல்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

  இந்த வெடிபொருள் சிக்கியது எப்படி தீவிரவாதிகள் ஏதேனும் இந்த பகுதியில் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணையில் கடலோர காவல் படை குழும போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடிபொருள் சிக்கிய சம்பவம் அப்பகுதி மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: ராஜசேகரன், அறந்தாங்கி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bomb, Fisherman, Pudukottai