Home /News /pudukkottai /

சதுரங்க ஆட்டம்.. வாள்வீசும் கலைஞர்கள்.. வைரலாகும் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாடல்!

சதுரங்க ஆட்டம்.. வாள்வீசும் கலைஞர்கள்.. வைரலாகும் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாடல்!

செஸ் ஒலிம்பியாட் 44: வித்தியாசமான விழிப்புணர்வு பாடலை வெளியிட்டு அசத்திய புதுகோட்டை மாவட்டம்

செஸ் ஒலிம்பியாட் 44: வித்தியாசமான விழிப்புணர்வு பாடலை வெளியிட்டு அசத்திய புதுகோட்டை மாவட்டம்

Chess Olympiad 2022 | புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முயற்சியில் புதுக்கோட்டை மற்றும் சென்னை கலைஞர்களைக் கொண்டு 44 வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    செஸ் விளையாட்டின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக,  தமிழக பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள், சுவர் விளம்பரங்கள், செஸ் விளையாட்டுப் போட்டிகள், கலை நிழ்ச்சிகள், இலக்கிய போட்டிகளை நடத்தி வருகிறது,

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முயற்சியில் புதுக்கோட்டை மற்றும் சென்னை கலைஞர்களைக் கொண்டு 44 வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு பாடல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செஸ் விளையாட்டில் வரும் காயின்களை போல் கலைஞர்கள் வேடம் அணிந்து போர் புரிந்து சதுரங்கத்தில் வெற்றி அடைவது எப்படி என்பதை விளக்கி கூறும் வகையில் காட்சியுடன் கூடிய பாடலை வெளியிட்டுள்ளது. அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோவானது தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வெளியிட்டப்பட்டது. அந்த பாடல் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக உள்ள கவிதா ராமு அவரது நான்கு வயதிலிருந்தே பரதநாட்டியத்தின் மீது உள்ள காதலால் பரதம் கற்ற நிலையில் அவரது எட்டு வயதில் சிதம்பரத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் இவர் ஆடிய பரதநாட்டியம் அனைவரது மனதையும்‌ கவர்ந்தது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு சீன அதிபர் ஜிஜிபிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற போது சீன அதிபரை வரவேற்க தமிழக பாரம்பரிய நடனத்தை ஏற்பாடு செய்து பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் பாராட்டை ஆட்சியர் கவிதா ராமு பெற்றார்.

    இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வித்தியாசமாக மாவட்ட ஆட்சியர் கவிதா நடத்தினார். அதில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற 8 மணி நேர இடைவிடாத டான்ஸ் மாரத்தானில் 1088 பங்கேற்பாளர்கள் பங்கேற்று சதுரங்கம் குறித்து 2003 செய்திகளை சொல்லி ஆசிய புக் ஆப் கார்டில் இடம்பெற்று சாதனை படைத்தார்.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசு செஸ் ஒலிம்பியாட் குறித்து பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புதுக்கோட்டை மற்றும் சென்னை கலைஞர்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் காட்சியுடன் கூடிய பாடலை தயாரித்துள்ளார்.

    Also see... 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்

    அதில் பின்னணி இசையில் சதுரங்கத்தில் வரும் கருப்பு வெள்ளை காயின்களை போல் இரு பிரிவுகளாக பிரிந்த கலைஞர்கள் ராஜா ராணி யானை குதிரை மந்திரி சிப்பாய்கள் என வேடமனிந்து சதுரங்கத்தில் எப்படி செயல்பட்டு வெற்றி அடைவது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் கலைஞர்களைக் கொண்டு சதுரங்க போர்டில் விளையாடுவதை போல் காட்சியை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.



    இந்த பாடல் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாடல் தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. தற்பொழுது அது வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chess Olympiad 2022, Pudukottai

    அடுத்த செய்தி