ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

வேங்கைவயல் வழக்கு விவகாரம் : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட டிஜிபி!

வேங்கைவயல் வழக்கு விவகாரம் : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட டிஜிபி!

வேங்கைவயல் கிராமம்

வேங்கைவயல் கிராமம்

Vengaivyal Problem | பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கடந்த டிசம்பர் 26ம் தேதி முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிந்து, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிப்பட்ட மாதிரி ஆய்வுக்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.

First published:

Tags: Pudukottai