முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / ஜல்லிக்கட்டு போட்டியில் அதிவேகம்.. கண்மாயில் பாய்ந்து நீரில் மூழ்கி பலியான காளை.. புதுக்கோட்டையில் சோகம்!

ஜல்லிக்கட்டு போட்டியில் அதிவேகம்.. கண்மாயில் பாய்ந்து நீரில் மூழ்கி பலியான காளை.. புதுக்கோட்டையில் சோகம்!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Pudukkottai News : புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை மாடு உயிரிழந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை மாடு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில், இந்த ஆண்டு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது  ஜல்லிக்கட்டு போட்டியின் நடுவே வேகமாக ஓடிய காளை மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கண்மாயில் விழுந்தது. இதனால் காளை மாடு தண்ணீரில் சிக்கி தவித்தது. வெகுநேரமாக தண்ணீரில் மூச்சு விட முடியாததால் பரிதாபமாக உயிரிழந்தது. 

இதனிடையே, போட்டியில் பங்கேற்ற மற்ற காளை மாடுகள் அடுத்தடுத்து கண்மாயில் விழுந்தன. இதையடுத்து, தண்ணீரில் 2 காளை மாடுகள் தத்தளித்தது. இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அங்கு  வந்த தீயணைப்பு துறையினர் 2 ஜல்லிக்கட்டு காளைகளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். மேலும், முறையாகப் பாதுகாப்பு வசதி செய்யப்படாததே இதற்கு காரணம் என அப்பகுதியினர் குற்றச்சாட்டினர். ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Jallikattu, Local News, Pudukkottai