Home /News /pudukkottai /

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை.. புதுக்கோட்டையில் பாஜக-வினர் போராட்டம்

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை.. புதுக்கோட்டையில் பாஜக-வினர் போராட்டம்

புதுக்கோட்டையில் டாஸ்மாக் விலை உயர்வை கண்டித்து பாஜக வினர் போராட்டம்

புதுக்கோட்டையில் டாஸ்மாக் விலை உயர்வை கண்டித்து பாஜக வினர் போராட்டம்

அரசு டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு மதுபாட்டில்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலையில் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒவ்வொரு மது பாட்டில்களுக்கும் பத்து ரூபாய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதனை கண்டித்து பாஜக வினர் மதுபான கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி நேற்று அரசு மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பத்து ரூபாய் அதிகமாக விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இப்படி ஒவ்வொரு பாடல்களுக்கும் பத்து ரூபாய் அதிகமாக விற்றால் ஒரு மாதத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் எவ்வளவு வருவாய் கிடைக்கும் இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக அரசு மதுபான கடைகளில் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை சுட்டிக் காட்டியும் மேலும் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வலியுறுத்தி புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடைகளுக்கு அருகே பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Also see... கேரளாவில் தனியார் பேருந்து கவிழ்ந்து செவிலியர் உயிரிழப்பு...

    இதனையடுத்து அந்த பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒரு மாத காலத்திற்குள் அரசு நிர்ணயித்த உரிய விலையில் மதுபானங்களை விற்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்து பாஜகவினர் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளார்: ர.ரியாஸ், புதுக்கோட்டை 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Pudukkottai, Tamil News, Tasmac

    அடுத்த செய்தி