ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட கோவிலில் அமைச்சர் மெய்யநாதன்.. அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து சாமி தரிசனம்

பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட கோவிலில் அமைச்சர் மெய்யநாதன்.. அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து சாமி தரிசனம்

அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதன்

தீண்டாமை தொடர்பான புகார்கள் குறித்து 3 சமுதாய மக்களுடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயலில் சர்ச்சைக்குள்ளான அய்யனார் கோயிலில் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து சாமி தரிசனம் செய்தனர்.

முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள ஐய்யனார் கோயிலில் 5 தலைமுறைகளாக பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 27-ஆம் தேதி அந்த தடையை உடைத்து பட்டியலின மக்களை கோயிலுக்கு அழைத்து சென்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சாமி தரிசனம் செய்ய வைத்தார்.

இதை தொடர்ந்து தீண்டாமை தொடர்பான புகார்கள் குறித்து 3 சமுதாய மக்களுடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏ சின்னத்துரை மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக கூடி சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Minister Meyyanathan