ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

ஆறுமுகசாமி ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை... அமைச்சர் ரகுபதி

ஆறுமுகசாமி ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை... அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

Law Minister | ஆறுமுகசாமி ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. இது முழுக்க முழுக்க முன்னாள் முதலமைச்சர் இறப்பில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம் என அமைச்சர் ரகுபதி கூறினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமயம் சட்டமன்ற தொகுதியின் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசிய தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் இன்று நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , “ஆறுமுகசாமி அறிக்கை தாக்கல் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் யார் யார் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் சுமத்தி இருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

  இதையும் படிங்க : சித்தன்னவாசலின் சிறப்பும்... சுற்றுலா பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களும்...

  இந்த ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை, இது முழுக்க முழுக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம். இந்த ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் என்பது எல்லோராலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

  ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபொழுது யாரிடம் கட்டுப்பாடுகள் அனைத்தும் இருந்தது என்று அந்த ஆணையம் முழுமையாக கூறியுள்ளது. ஒரு அமைச்சரை தவிர அதில் யாருக்கும் தொடர்பு கிடையாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது மருத்துவமனையில் அறை எடுத்து தங்கி இருந்த குடும்பத்தை சேர்ந்த டிடிவி தினகரன் இந்த அறிக்கையை வரவேற்க மாட்டார் தான்.

  பொறுப்பு முதலமைச்சராக ஓபிஎஸ் இருந்தாலும் யாரையுமே அனுமதிக்கவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்றத்தில் பேசிய கட்சியினர் இந்த விவகாரத்தில் குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என எடுத்துரைத்தனர். ஆனாலும் துறை ரீதியாக பரிசீலித்து அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

  இதையும் படிங்க : எஜமானரை காக்க விஷப்பாம்பை கடித்து கொன்ற வளர்ப்புநாய் - மோதலில் நாயும் உயிரிழந்த பரிதாபம்

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆணையத்தின் அறிக்கைப்படி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உள்துறை தான் முடிவு செய்யும். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைப்படி அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சரிடம் பொறுப்பு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் ஜெயலலிதாவை மருத்துவத்திற்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல கூறியதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பிறகு எப்படி ஓபிஎஸ்சை குற்றம் சுமத்த முடியும்” என்று தெரிவித்தார்.

  செய்தியாளர் : ர.ரியாஸ் - புதுக்கோட்டை

  Published by:Karthi K
  First published:

  Tags: Minister, Pudukkottai