Home /News /pudukkottai /

செஸ் ஒலிம்பியாட் நடத்தியது எல்லாம் ஒரு சாதனையா? ஒரு காயினை நகர்த்த முதல்வருக்கு தெரியுமா? - அண்ணாமலை

செஸ் ஒலிம்பியாட் நடத்தியது எல்லாம் ஒரு சாதனையா? ஒரு காயினை நகர்த்த முதல்வருக்கு தெரியுமா? - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Annamalai : தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடத்தியது எல்லாம் ஒரு சாதனையா என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டையில் பாஜக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசுகையில்,   லஞ்சத்தில், ஊழலில் ,கொலை செய்வதில், கூட்டு பாலியில் செய்வதில் தான் தமிழகம் நம்பர் 1 ஆக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை கூட தமிழகத்தில் செயல்படுத்த வெள்ளையர்கள் ஆட்சி காலத்தை போல் இங்கு உள்ளவர்களுக்கு கமிஷனாக கப்பம் கட்ட வேண்டியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

    திமுக ஆட்சியில் கஜானா காலியாக உள்ளது. கடந்த 2019-2020ம் ஆண்டு கனிம வளம் மூலம் 1,303 கோடி வருவாய் வந்த நிலையில் இந்த வருடத்தில் 1,179  கோடி மட்டுமே கனிம வளத்தின் மூலம் அரசுக்கு வருவாய் வந்துள்ளது. கனிம வளம் மூலம் அரசுக்கு வருமானாம் அதிகரிக்க வேண்டிய நிலையில் திமுகவினர் அதில் கொள்ளையடித்து கொண்டு உள்ளனர்.

    ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார், ஆனால் ஆகஸ்ட் 14ம் தேதி  ஒரு நாளில், டாஸ்மாக் மூலம் ரூ.250 கோடி இந்த அரசு வருமானம் ஈட்டியுள்ளது. இந்த அரசு வருமானத்திற்கு டாஸ்மாக்கை மட்டுமே நம்பியுள்ளது. முடிந்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும். திமுகவை சேர்ந்தவர்கள் எம்.பி.கள் யாரும் மது ஆலைகள் நடத்தவில்லை. அதன் மூலம் வருமானம் வரவில்லை என்று சொல்லட்டும் என்றார் அண்ணாமலை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.'

    செஸ் ஒலிம்பியாட்டில் முதல்வர் சாதனை படைத்துவிட்டதாக சொல்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு காயினை நகர்த்த தெரியுமா? செஸ் ஒலிம்பியாட் நடத்தியது எல்லாம் ஒரு சாதனையா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    இந்திய மாநில அரசுகளில், தமிழக அரசு தான் அதிக கடன் வாங்கியுள்ளது. தற்போது வரை இந்த அரசு 6.14 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு வாங்க வேண்டிய 1,20,000 ஆயிரம் கோடி கடனையும் சேர்த்து 7,34,000 கோடி கடன் சுமையில் தமிழக அரசு இருக்கும்.

    Must Read : பெண்ணின் ஆடை பாலியல் உணர்வை தூண்டுவதாக இருக்கிறது - பாலியல் வழக்கில் கேரள நீதிமன்றம் தெரிவித்த கருத்தால் சர்ச்சை

    இதைப்பற்றி எல்லாம் இந்த ஆட்சியாளர்கள் கவலைப்படுவதாக இல்லை என்று குற்றம் சாட்டிய அண்ணாமலை, இந்த ஆட்சியாளர்கள் சினிமாத்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்கள் பிரச்சனைகளுக்கு காட்டுவதில்லை. நாடக ஆட்சி இப்போது சினிமா ஆட்சியாக மாறிக்கொண்டுள்ளது என்று அண்ணாமலை விமர்சித்தார்.

    செய்தியாளர் - ரியாஸ்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Annamalai, BJP, Chess Olympiad 2022, Pudukkottai

    அடுத்த செய்தி