Home /News /pudukkottai /

சகோதரி அஸ்வினி குரல்.. திமுக ஆட்சிக்கு கொடுத்த சம்மட்டி அடி - அண்ணாமலை பேச்சு

சகோதரி அஸ்வினி குரல்.. திமுக ஆட்சிக்கு கொடுத்த சம்மட்டி அடி - அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை

அண்ணாமலை

நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த அஸ்வினி தங்கள் சமூகம்  ஏமாற்றபட்டுள்ளது என்று கூறியிருப்பது திமுக ஆட்சிக்கு கொடுத்த சம்மட்டி அடி என அண்ணாமலை கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டையில் பாஜக சார்பில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது, சமூக நீதி, சம நீதி பேசும்  திமுக ஆட்சியில் 20 ஊராட்சி தலைவர்கள் தேசிய கொடியேற்ற முடியவில்லை. 42 ஊராட்சி தலைவர்கள் தங்களின் பெயர் பலகையை கூட ஊராட்சி அலுவலகத்தில் வைக்க முடியவில்லை. அவர்கள் அனைவரும் பட்டியலின தலைவர்கள். இதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் அவல நிலை.

    ஜாதி, மத மோதல், கூட்டு பலாத்காரம் அதிகமாக உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்கள் அமைதியாக உள்ள நிலையில் தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. இதுதிராவிட மாடல் ஆட்சி அல்ல நாடக ஆட்சி, திமுக ஒரு நாடக கம்பெனி என்று விமர்சித்தார்.

    நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சகோதரி அஸ்வினி தங்கள் சமூகம் எவ்வாறு ஏமாற்றபட்டுள்ளது என்பதையும், முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை எனவும் இந்த ஆட்சியில் சமூக நீதியும், சம நீதியும் இல்லை என்பதை அவர் உறக்க கூறி இருப்பது இந்த திமுக ஆட்சிக்கு கொடுத்த சம்மட்டி அடி என்று கூறிய அண்ணாமலை, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களின் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்ட முதலமைச்சர், தன் கைகளால் கொடுத்த காசோலையே செல்லாகாசாக திரும்பி வந்திருக்கிறது என்றும் கூறினார்.

    திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது, எல்லா பக்கமும் ஊழல், உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். இதற்கெல்லாம் திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும். ஊழல் செய்த மந்திரிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தப்ப முடியாது.
    25 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என்று கேட்டார். இன்னும் நான்கே மாதத்தில் பாஜவை எதிர் கட்சி என்று அவர்களே அழைப்பார்கள் என்றார் அண்ணாமலை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    508 தேர்தல் வாக்குறுதிகளை திமுக கொடுத்து இருந்தது. ஆனால் அதில் மகளிருக்கு உதவித்தொகை உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்த 16 மாதங்களாகியும் நிறைவேற்றவில்லை. அதேபோல் தமிழக மீனவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் இந்த திமுக அரசு நிறைவேற்ற வில்லை.

    Must Read : இனி இவர்களுக்கு பென்சன் கிடையாது.. விதிகளை மாற்றிய மத்திய அரசு!

    திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அதிக நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் பாஜக ஆட்சியில் ஒரு மீனவர்கள் கூட இலங்கை சிறையில் இல்லை என்றும் அண்ணாமலை கூறினார்.

    செய்தியாளர் - ரியாஸ்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Annamalai, BJP, Pudukkottai

    அடுத்த செய்தி