Home /News /pudukkottai /

நான் அரசியலுக்கு வந்ததற்கு திமுகதான் காரணம் - அண்ணாமலை

நான் அரசியலுக்கு வந்ததற்கு திமுகதான் காரணம் - அண்ணாமலை

அண்ணாமலை,

அண்ணாமலை,

Annamalai : பாஜகவில் இருந்து வெளியே செல்பவர்கள் தேசிய சித்தாந்தத்தையும் எடுத்து செல்கிறார்கள் -பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே பாஜக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசுகையில், 70 ஆண்டுகால தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக புதுக்கோட்டை திகழ்கிறது. இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றார்.

    டெல்லிக்கு போவதற்கே முதல்வருக்கு பயம். அதனால்தான் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் டெல்லி செல்ல தயங்குகின்றனர். பாஜக அருகே வருவதற்கு ஒரு தகுதி வேண்டும். திமுகவில் எந்த தலைவருக்கு பாஜக தொண்டனுடன் நிற்கும் தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, இது ஒரு ஸ்டிக்கர் அரசு, திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டதிற்கு முன்னரே நான் படித்த கல்லூரி தொடங்கப்பட்டுவிட்டது.

    நான் படித்ததிற்கு திமுக காரணமா என்பது எனக்கு தெரியாது, ஆனால் நான் அரசியலுக்கு வந்ததற்கு திமுக தான் காரணம். நடுத்தர சாதாரன வாழ்வு நடத்தி கொண்டு இருந்த என்னை திமுக நாசகர ஆட்சியின் பாதிப்பு தான் அரசியலுக்கு வர வைத்தது என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மகாராஷ்ட்ரா மாநில உத்தவ் தாக்ரே குடும்பம் போல் இங்கே ஸ்டாலின் குடும்பம் உள்ளது. சிவசேனா கட்சியை போல இங்கு தமிழகத்தில் திமுக உள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் பத்து பொருத்தமும் சரியாக உள்ளது. அங்கே ஒரு ஏக்நாத் சின்டே கிளம்பிவிட்ட நிலையில் இங்கே ஒரு சின்டே கிளம்ப மாட்டாரா..? நிச்சியம் கிளம்புவார். அதனால் தான் திமுகவிற்கு தற்போது நடுக்கம் ஏற்பட்டுள்ளது. திமுகவில் இருந்து ஒரு ஏக்நாத் சின்டே கிளம்புவார் என்றார் அண்ணாமலை.

    Must Read : கோவையில் யாராவது சட்டத்தை கையில் எடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது - பாஜகவினரை எச்சரிக்கும் செந்தில்பாலாஜி

    மேலும், பாஜகவிற்கு வந்துவிட்டு வெளியே செல்பவர்கள் தங்களோடு சேர்த்து தேசிய சித்தாந்தையும் எடுத்து செல்கின்றனர். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய மரம் போல் பாஜக உள்ளது. வருகின்ற அனைவரையும் அரவணைக்கும் கட்சி பாஜக. பாஜகவிற்கு யாரும் எதிரி இல்லை. ஊழல் செய்பவர்களும், குடும்ப ஆட்சியாளர்களும் மட்டுமே பாஜகவிற்கு எதிரானவர்கள். நிச்சம் தமிழகத்தில் அரிசியல் மாற்றம் வரும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் - ர.ரியாஸ்
    Published by:Suresh V
    First published:

    Tags: Annamalai, BJP, Pudukkottai

    அடுத்த செய்தி