ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

கார்த்திகை தீபத்திற்கு புதுக்கோட்டையில் முழுவீச்சில் தயாராகும் அகல் விளக்குகள்... 

கார்த்திகை தீபத்திற்கு புதுக்கோட்டையில் முழுவீச்சில் தயாராகும் அகல் விளக்குகள்... 

அகல்விளக்கு தயாரிப்பு

அகல்விளக்கு தயாரிப்பு

Pudukkottai District News : கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இதற்காக முழுவீச்சில் அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள புதுக்கோட்டை மண்பாண்ட தொழிலாளர்கள். 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள இராம கவுண்டம்பட்டி கிராம மக்கள் 50 வருடத்திற்கும் மேலாக மட்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 6ம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம்.

இதற்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் இந்த கிராமத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள். இங்கு தயாரிக்கப்படும் விளக்குகளை ஆர்வத்துடன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

அகல்விளக்கு தயாரிப்பு

இதையும் படிங்க : புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 29ம் தேதி மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

இதுகுறித்து பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் வேலாயுதம் கூறுகையில், “ நாங்கள் அகல் விளக்குகள் பானைகள், மண் அடுப்புகள், உண்டியல், குமுல் போன்றவையும், பாரம்பரியமாக திருமணத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கோயில்களில் வைக்கப்படும் கிளி கூடு ஆகியவற்றை தயார் செய்து வருகிறோம். 

எங்களுக்கு லாபம் வருகிறதோ இல்லையோ அடுத்த தலைமுறையினருக்கு இந்த கலையை நிச்சயம் கற்றுத் தருவோம். என் பேரன் விடுமுறை என்பதால் அகல் விளக்கு தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளான். அவனுக்கு இது மிகவும் பிடித்துப்போகவே என்னிடம் இருந்து கற்றுக் கொண்டான்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கார்த்திகை தீபம் வரவுள்ள நிலையில் அதிக அளவில் அகல் விளக்குகளை தற்போது நாங்கள் செய்து வருகிறோம். எங்களுக்கு களிமண் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. அதற்கு அரசு ஏதேனும் உதவி செய்தால் நன்றாக இருக்கு” என கூறி பேரன் கோபி செய்த விளக்கில் மாற்றங்கள் செய்ய கிளம்பினார் வேலாயுதம்.

செய்தியாளர் : சினேகா விஜயன் - புதுக்கோட்டை  

First published:

Tags: Local News, Pudukkottai