Home /News /pudukkottai /

ஆன்லைன் ரம்மி விளம்பரம்- நடிகர்களுக்கு அமைச்சர் ரகுபதி அட்வைஸ்

ஆன்லைன் ரம்மி விளம்பரம்- நடிகர்களுக்கு அமைச்சர் ரகுபதி அட்வைஸ்

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

 தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அதன் பின்பு இதனை முழுமையாக ஒழிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்படும்- அமைச்சர் ரகுபதி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் அவர்களாக திருந்த வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  பேரணியில் பொய்க்கால் குதிரை, கட்டைக்கால் ஆட்டம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைகளில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர்.

    பேரணியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பவர்கள் மீதும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்’ என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அதன் பின்பு இதனை முழுமையாக ஒழிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்படும். இதற்கு மக்களிடம் கருத்து கேட்க வேண்டுமா என்று நேற்று ஒருவர் (முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி) கேலி செய்து உள்ளார், நாங்களாக மக்களிடம் கருத்து கேட்கவில்லை நீதிமன்றம் சொன்னதன் அடிப்படையில் தான் கருத்து கேட்டுள்ளோம்.

    இதையும் படிங்கள்: ஒரே ஆண்டில் 3வது முறையாக பால் விலை உயர்வு: தமிழக அரசு தலையிட பால் முகவர் சங்கம் வேண்டுகோள்

    கடந்த ஆட்சியாளர்கள் மக்களிடம் கருத்து கேட்டு முறையாக இந்த சட்டத்தை கொண்டு வந்திருந்தால் ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்கலாம். நாங்கள் நிரந்தரமாக ஆன்லைன் ரம்மி ஒழிக்க நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம் நிச்சயம் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி ஒழிக்கப்படும் என தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சிலர் நடிகர்கள் நடிப்பது குறித்து கேட்டபோது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும் என்று தெரிவித்தார்.

    செய்தியாளர்: ரியாஸ் - புதுக்கோட்டை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Minister, Online rummy

    அடுத்த செய்தி