ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

எஜமானரை காக்க விஷப்பாம்பை கடித்து கொன்ற வளர்ப்புநாய் - மோதலில் நாயும் உயிரிழந்த பரிதாபம்

எஜமானரை காக்க விஷப்பாம்பை கடித்து கொன்ற வளர்ப்புநாய் - மோதலில் நாயும் உயிரிழந்த பரிதாபம்

பாம்பை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்

பாம்பை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்

Pudukkottai | புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே  எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை நாய் கடித்து கொன்றது. பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  நன்றியுள்ள பிராணிக்கு எடுத்துக்காட்டாக நாயை சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தனது எஜமான் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்றை வளர்ப்பு நாய் கடித்துக் கொன்றது. அதோடு பாம்பு கடித்ததில் தானும் உயிரிழந்து தனது நன்றியின் வெளிப்பாட்டை உலகிற்கு  எடுத்துக்காட்டியுள்ளது.

  சினிமாக்களில் நாய் வீட்டிற்கு தேவையான பொருட்களை கடைக்கு சென்று வாங்குவது, தன்னை வளர்த்த எஜமானர்களை, அவர்கள் வீட்டில் உள்ளவர்களை பாம்பு, திருடர்களிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற சம்பவங்கள் இடம் பெற்று இருக்கும். இதே போன்ற சம்பவங்கள் நிஜத்திலும் ஆங்காங்கே நடைபெறுவது உண்டு.

  அதேபோலத்தான் இலுப்பூர் அருகே உள்ள குறிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயந்த் இவரது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றார். இன்று வீட்டின் முகப்பு பகுதியில் நல்ல பாம்பு ஒன்று  வந்து வீட்டிற்குள் நுழைய முயன்றது. இதனை பார்த்த  நாய், பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது. இதில் நாய் கடித்ததில் பாம்பு இறந்தது.

  அதே நேரத்தில் பாம்பு கடித்ததில் அதன் விஷம் நாய்க்கு ஏறியதில் வாயில் நுரை தள்ளியபடி நாயும் இறந்தது. வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது பாம்பும், நாயும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்..

  Also see... பொள்ளாச்சியில் சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள்

  வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று, தனது உயிரை விட்டு குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் உடலுக்கு ஜெயந்த் அவருடைய குடும்பத்தினர் பூக்களை தூவி கண்ணீர் மல்க புதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களுக்கு துயரையும் நெகிழவை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Dog, Pudukkottai, Snake